2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத வேப்பை மரக்குற்றிகள் மீட்பு; ஒருவர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹிஜ்ரா நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேப்பை மரக்குற்றிகள் 18ஐக் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரொருவரையும் கைதுசெய்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட பொலிஸ் குழுவினர், இன்று (13) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே, வாகரை பகுதியில் இருந்து வெட்டப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 அடி நீளமாக வேப்பை மரக் குற்றிகள் 18 கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மரங்கள் வெட்டக் கடத்தப்படும் சம்பவங்களை தடுக்கும் வகையில், விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .