2024 மே 10, வெள்ளிக்கிழமை

சிரமதானப் பணி முன்னெடுப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்வி வலயத்தின்  வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரனின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு  மாநகர எல்லைக்குட்பட்ட சத்துருகொண்டான், பிள்ளையாரடி பிரதான வீதியோரங்கள், ஆற்றங்கரையோர பகுதியில் குப்பகைளை அகற்றித் துப்பரவு செய்யும் பணிகள், இன்று (01) முன்னெடுக்கப்பட்டன.

இந்த டெங்கொழிப்பு நடவடிக்கை, மட்டக்களப்பு  மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், விபுலானந்தா வித்தியாலயம் , கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் , நாவலடி நாமகள் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலை அதிபர்களின் தலைமையின் கீழ், 80 மாணவர்களுடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். பாலசுபிரமணியம், பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பாதுகாப்பு குழு உறுப்பினர், மாநகரசபை ஊழியர்கள் இணைந்து குப்பகைளை அகற்றித் துப்பரவு செய்யும் பணி ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .