2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜப்பான் நாட்டுத் தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கைக்கான ஜப்பான் நாட்டுத் தூதுவர் கென்ஸி சுகானாமா, மட்டக்களப்புக்கு இன்று (06) விஜயம் செய்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் நாட்டுத்தூதுவர், மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்து, அங்கு மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, மட்டக்களப்பு மாநகரத்தின் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதையடுத்து, மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பொது நூலகக் கட்டடத்தையும் தூதவர் பார்வையிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் கே.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் ஏ.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் எஸ்.தணஞ்சயன், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர், ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .