2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தண்ணீர் தொழிற்சாலை விவகாரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு

வா.கிருஸ்ணா   / 2018 ஜூலை 04 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, புல்லுமலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும்  தண்ணீர் தொழிற்சாலை விடயத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவில், மேற்படித் தொழிச்சாலையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கோவையொன்றை, வியாழேந்திரன் எம்.பி கையளித்துள்ளார்.

குறித்த கோவையில், தண்ணீர்த் தொழிற்சாலையால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்துக்  குறித்தும் அவற்றுக்காக  முறைகேடாகப் பெறப்பட்ட  அனுமதிகள் குறித்தும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அவற்றைப் பெற்றுக்கொண்ட  அமைச்சர் விஜயதாச, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேசி முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .