2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொழில்வாய்ப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வாண்டு முடிவடைவதற்குள், நைற்றா மூலமாக, சுமார் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்படுவதாக, தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை கூட்டமைப்பு என்ற தனியார் நிறுவனமும் நைற்றாவும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் டிஜிட்டல் பயிற்சியில், சர்வதேச தகுதியுள்ள சான்றிதழை பெறுவதற்கான கூட்டு பயிற்சிமுறைமை ஒன்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு, நைற்றா தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்றது.

கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக் கருத்துத் தெரிவித்த நைற்றா தலைவர், கடந்த வாரங்களில் தனியார்துறைகளில் பயிற்சிசார் தொழில்துறை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன என்றார்.

இதேபோன்று, வெளிநாடுகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் மேலதிக கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் மற்றொரு முயற்சியாகவே, டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .