2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நவீனமயப்படுத்தப்பட்டு நூலகம் திறந்து வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காத்தான்குடி நகர சபையால் நவீனமயப்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது நூலகம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று (02) திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி பொது நூலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன், நவீனமுறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகம், இணைய நூலகம் ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டன.

இதையடுத்து நூலகம் தொடர்பான காணொலியும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கடந்தாண்டின் தேசிய வாசிப்பு மாத இறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .