2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிளாஸ்டிக்கள் சேகரிக்க மீன்கள் வடிவிலான குப்பைத் தொட்டிகள்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி கடற்கரையில், வெற்று பிளாஸ்டிக் போத்தல்களைச் சேகரிக்கும் நோக்குடன், மீன் வடிவிலான குப்பைத் தொட்டிகள், காத்தான்குடிக் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளி முன்றலிலும் புதிய சிறுவர் பூங்காவிலும் (பாலத்துக்கு அருகில்) இந்த மீன்வடிவிலான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இவை, நாளை (31) மாலை தொடக்கம் பொதுமக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக விடப்படவுள்ளன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிதியுதவியுடன், காத்தான்குடியில் காணப்படுகின்ற பசுமைக் கழகங்களில் ஒன்றான ஆர்.எச்.சட் நிறுவனத்துக்கு நிதி வழங்கப்பட்டு, அந்த நிறுவனத்தால் இத்தொட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை, காத்தான்குடி நகர சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுடன், இவற்றினுள்  சேகரிக்கப்படுகின்றன பிளாஸ்டிக் போத்தல்கள் கழிவுகளை, காத்தான்குடி நகர சபையால் மீள் சுழற்சிக்குட்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .