2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 12 வீட்டு திட்டங்களுக்கு அடிக்கல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் “யாவருக்கும் வீடு” (செமட்ட செமன) மாதிரிக் கிராமத்திட்டத்தின் 12 வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள், மட்டக்களப்பு மாவட்டத்தில், நேற்று முன்தினம் (04) மாலை நடைபெற்றன.

இதில் 4 வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில், மாவட்டத் தேசிய வீடமைப்பு அதிகார சபை தலைவர் மா.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகராஜா, உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதுமண்டபத்தடி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள நடராஜ நந்தபுரத்தில் இரண்டு கிராமங்கள், இலுப்படிச்சேனை கிராம சேவையாளர் பிரிவில் நாவல் தோட்டம் கிராமம், விழாவெட்டுவான் கிராம சேவையாளர் பிரிவில் அரச புரம் கிராமம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.

அதேபோன்று, கோரளளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராம சேவையாளர் பிரிவு, கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்பிரிவில் புணானை, ஜெயந்தியாய கிராம சேவையாளர் பிரிவுகள், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் தளவாய், களுவன்கேணி கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் நடைபெற்றன.

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 124 வீட்டுத்திட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பதுடன், 121 வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தற்போது அடிக்கல் நடப்பட்டுள்ள 12 திட்டங்களுடன் 136 வீட்டுத்திட்டங்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடற்ற வறுமைய நிலையிலுள்ள மக்களுக்கு வீடுகளை வழங்கும் வகையில் யாவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் இலவசமாகக் காணியும் வழங்கி வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .