2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டு. மாநகர சபையின் 30ஆ​வது அமர்வு

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபையின் 30ஆ​வது அமர்வு, மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில், இன்று (14) காலை நடைபெற்றது.

மாநகர சபையின் மக்கள் சபை அமைக்கப்பட்டு 30ஆவது அமர்வின் இன்றைய ஆரம்பத்தில், மாநகரசபை கீதம் இசைக்கப்பட்டு, உயிர்நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாநகரசபை முதல்வரின் தலைமையுரை இடம்பெற்று, சபையின் முன்மொழிவுகள், மாநகர முதல்வரால் வாசிக்கப்பட்டு, சபையினால் அங்கிகரிக்கப்பட்டது.

அத்துடன், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் முன்னெடுப்புகள் தொடர்பிலும், மாநகரசபை உறுப்பினர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு நகரில் உள்ள விளையாட்டுப் பூங்காவை, அங்கிருந்து அகற்றி வேறு ஓர் இடத்தில் அமைப்பது குறித்தும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள விளையாட்டு பூங்காவினை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தனிநபர்களின் கட்டுப்பாட்டை நீக்குமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது அந்த பூங்காவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பூங்காவின் பாதுகாப்பு நடைமுறை கருதி அமைப்பு ஒன்றுக்கு பராமரிப்புக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில்,  பல விளையாட்டுக்கழங்கள் பதிவு செய்யப்பட்டு, விளையாட்டு மைதானங்களையும் கொண்டிருக்கின்ற போதிலும், அடைவுமட்டம் இல்லாத நிலையுள்ளதாகவும் அவ்வாறான விளையாட்டுக் கழகங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என இங்கு மாநரசபை உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

மாநகர சபையின் இன்றைய அமர்வின் போது, மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கு முதல்வரால் பதிலளிக்கும் வகையிலான கருத்துகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .