2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணல் ஏற்றுவதை தடுத்தவர்கள் மீது தாக்குதல்

Editorial   / 2020 மே 29 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில், மண் ஏற்றுவதற்குச் சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி குளம் பகுதியில், ஓட்டமாவடியை சேர்ந்தவர்களால் தொடர்ச்சியாக சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வுகள் குறித்து, இப்பகுதியை சேர்ந்த மக்களால் பல்வேறு தடவைகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு, உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அப்பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று (28) அப்பகுதிக்கு மணல் அகழ்வுக்குச் சென்றவர்களை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போதே, மணல் அகழ்வுக்கு சென்றவர்களால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஓட்டமாவடியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு உழவு இயந்திரத்தில் வந்து, அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என, வாகனேரி மக்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்கள் காரணமாக, பெண்ணொருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்து, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்), வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் ஆகியோர், கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .