2024 மே 08, புதன்கிழமை

’மாடுகள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்து’

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வா.கிருஸ்ணா, வ.திவாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலிருந்து, சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு கோரி, பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, கால்நடைப் பண்ணையாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்துக்கு பின்னர், படுவான்கரைப் பகுதியிலிருந்து மாடுகளைக் கடத்திச்செல்லும் நிலை அதிகரித்துள்ளது என்றும், எனினும், இது தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி.எஸ்.பண்டார, இந்த ஆண்டு, இதுவரையில் 75க்கும் மேற்பட்ட மாடுகளின் கடத்தல்கள், பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாடு கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X