2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் 2150 முறைப்பாடுகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான  கலாசாரத்  தடையை  ஏற்படுத்துவது அடிப்படை உரிமை மீறலெனத் தெரிவித்து  மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பெண்கள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் ,தனித் தனியாகவும் சுமார் 2150 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான  கலாசாரத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாதெனவும், நிகாப் மற்றும் புர்கா போன்ற  ஆடைக் கலாசாரத்தினை தடை செய்ய எடுக்கும் நடடிவக்கையை  உடமையாக சட்டமாக்கக் கூடாதெனத் தெரிவித்து காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச்  சேர்ந்த பெண்கள் மட்டக்களப்பு மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்த முறைப்பாடுகளில் சுமார் 996 முறைப்பாடுகள் தனித்தனியாக பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிப்பிட்ட மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர்,இலங்கை அரசியல் அமைப்பில் மூன்றாம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமையில் ஒர் உறுப்புரை 10, 12 பிரிவுகள் மீறப்படுவதாக கருதுவ தாகவும் அம்முறைப் பாட்டில் தெரிவித்துள்ளன.இம்முறைப்பாடுகள் பற்றி மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .