2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜப்பானியத் தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுச் செயலாளர் டெகசி ஒசாகி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு, காத்தான்குடியில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், முஸ்லிம் சமூகத்துக்கெதிரான வெறுப்பூட்டப்படும் பேச்சுகள், ஆடை விவகாரத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள், மார்க்கக் கல்விப் போதனை நிலையங்களான மதரசாக்கள் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட முஸ்லிம்கள் சமகாலத்தில் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகள் சம்பந்தமாக டெகசி ஒசாகி கேட்டறிந்து கொண்டதாக,  ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், இனவாத அடக்குமுறைமைகள் தொடர்பாகவும், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் என்ற ஊகங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .