2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வகைப்படுத்தப்படாத குப்பைகள் ஏற்றுக்கொள்ளப்படாது

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

கிழக்கு மாகாணத்தில், வகைப்படுத்தப்படாத குப்பைகளை மார்ச் மாதம் 01 முதல் ஏற்றுக்கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தீர்மானத்தை, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்குமாக மாகாண சபைகளின் அமைச்சின் செயலாளருக்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

வகைப்படுத்தப்படாத குப்பைகளை, உள்ளூராட்சி மன்றங்கள் சேகரிப்பதன் காரணமாக மாகாணத்தில் பல சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. குப்பைகளை முறையாக வெளியேற்றாததால் காட்டு யானைகளின் பிரச்சினை அதிகரித்துள்ளது. 

எனவே, அழிந்துபோகக்கூடிய மற்றும் அழியாத குப்பைகளை தனித்தனியாக சேகரிக்க உள்ளூராட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு உத்தரவிடுமாறு, ஆளுநர் அறிவுறுத்தினார்.
 
இந்த முடிவு குறித்து மார்ச் 01க்கு முன்னர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த ஓர் அமைப்பு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .