2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விவசாயிகளுக்கு மானிய உரம் விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு, இன்று (09) முதல் மானிய உரம் விநியோகம் ஆரம்பமாகியுள்ளமை மகிழ்ச்சியை அளித்துள்ளதாக, மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே. யோகவேல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில், சிறுபோகச் செய்கை ஆரம்பித்து தற்போது சுமார் ஒரு மாதத்தைக் கடந்து நெற்பயிர்கள் வளர்ந்துவிட்ட நிலையில், உரமானிய விநியோகம் ஆரம்பித்துள்ளது.

இது விவசாயிகளுக்கு ஆறுதலளித்துள்ளதாயினும் வளமான அறுவடையைப் பெற்றுக் கொள்ள இந்த காலந்தாழ்த்திய உர விநியோகம் வாய்ப்பளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

அரசாங்கம் ஓர் ஏக்கர் நெல் விவசாயத்துக்கு 5,000 ரூபாயை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும். தற்போது ஒரு 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாய்க்கு அரசு உர மானியமாக வழங்குகின்றது.

அதேவேளை, ஐந்து ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை சந்தையில்  1,500 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்தற்காக அரசு சலுகை அளித்துள்ளது.

ஆயினும், அவ்வாறான சலுகை உரம் இன்னமும் சந்தைக்கு வந்து சேரவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .