2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’வேறுபாடுகள் இன்றி ஒன்றுதிரளுங்கள்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பின்னணியிலுள்ள அதிகாரமுள்ள சிலரால், வளங்கள் சூறையாடப்பட்டு, சிதைக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ள, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம், அச்செயற்பாடுகளைத் தடுத்துநிறுத்த, இனம், மதம், கட்சி எனப் பாராது ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை இன்று (29) விடுத்திருந்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, யுத்தகாலத்திலும் கூட, இயற்கை வளங்கள், அதிகமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, மழை நீர் நேடியாகக் கடலுக்குச் செல்லும் அளவுக்கு, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், கடல், வாவி, குளங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

முன்னைய காலத்தில் பின்பற்றப்பட்ட சில கொள்கைகள் காரணமாகவே, வளங்கள் பாதுகாக்கப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், அரசியல் பின்னிணியிலுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரப்பலத்துடன் மோசடி செய்து வளங்களை சூறையாடுவதும், காட்டு மரங்களை வகை தொகையின்றிக் கொண்டு செல்வதும், கடற்பகுதியில் அனுமதியின்றி இயற்கை வளங்களைச் சூறையாடுவதும், உல்லாசத் துறையை ஊக்கமளிக்கும் பார்வையில் மேற்கத்தேய கலாசார முறையை திணிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என, அவர் சாடினார்.

இவை மட்டுமின்றி, கிரான், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மகாவலிக்குச் சொந்தமான அரச காணிகளில், அபிவிருத்திக்கென ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில், மாற்று இனத்தைச் சேர்ந்தவர்களைக் குடியேற்றுவதற்கு வெளிமாவட்டத்தினர் சூழ்ச்சிகளை நடத்துகின்றனரா என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .