2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வைரஸை தடுக்க அரச, தனியார் நிறுவனங்கள் கூட்டு செயற்பாடு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.எல்.ஏ.அஸீஸ், வ.சக்தி

கல்முனை பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான அவசர செயற்பாடுகளை அரச, தனியார் நிறுவனங்கள் இணைந்து முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் என்.ஆரிப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அவதானித்தல், சந்தை, வர்த்தக நிலையங்களில் மக்கள் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளல், பொது இடங்களுக்கு தேவை நிமிர்த்தம் வரும் மக்களுக்கு கை கழுவுதற்கான ஏற்பாடு செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு நடடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும், பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் வகையிலும், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் விசேட செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .