2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2 மணிக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்புமாறு பணிப்பகிஷ்கரிப்பு

ஆ.ரமேஸ்   / 2019 மே 16 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடபுஸ்ஸலாவை பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோட்லோஜ் தோட்டப் பிரிவான சமர்ஹில் தோட்டத் தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டுக்கு எதிராக, இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்திலுள்ள கோட்லோஜ் தோட்ட நிர்வாகம், பகல் இரண்டு மணியுடன் தொழிலாளர்களுக்குப் பணி விடுமுறை வழங்கி வருகின்ற நிலையில், கோட்லோஜ் தோட்டப் பிரிவான சமர்ஹில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரம் இந்த விடுமுறையை வழங்கவில்லை என்று கூறியே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.  

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு, 2 மணியுடன் பணி விடுவிப்பு வழங்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்திய மேற்பார்வையாளர், நேற்று (15) முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்தும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.  

இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினரும் நுவரெலியா பிரதேச சபை தவசாளருமான வேலு யோகராஜ், இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக உறுதியளித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .