2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘20 குறித்து அறிவில்லை’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கணேசன் 

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் பற்றி தெரியாதவர்களே, மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றஞ்சாட்டுகின்றனர் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைலர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.  

மூன்று நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, நுவரெலியா மாவட்டத்தின் பல தோட்டப்பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர், அவர் மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டிருந்தார்.  

அந்த வகையில், அக்கரபத்தனைக்கு, கடந்த 2ஆம் திகதி சென்றிருந்த அவர், அங்கு ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படும் என்றால், அதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கும் எனக் கூறிய அவர், ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தனிநபர் ஆட்சிக்கு தயாரானால், அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் கூறினார்.  

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், மஹிந்த அணியினர், தங்களை எதிர்ப்பதாகக் கூறிய அவர், 20ஆவது திருத்தச் சட்டத்தில் என்ன அடங்கியுள்ளது என்பது குறித்த போதிய அறிவின்மையே இதற்குக் காரணம் என்றும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .