2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அக்குறணையில் 375 டெங்கு நோயாளர்கள்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேச செயலக பிரிவிக்குள் இவ்வருடம் இதுவரை 375 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனரென, அக்குறணை பிரதேச சுகாதார அதிகாரி காரியாலயம் தெரிவிக்கின்றது.

இப் பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து அரச நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொண்ட முயற்சியால், ​டெங்கால்  மரணங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது என்றும், அக்காரியாலம் தெரிவித்துள்ளது.

தற்போது மழை வானிலை நீடித்து வருவதால், டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளதெனவும் எனவே, நேற்று ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை, நாளை  மறுதினம்  (22) வரையிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும்  சுகாதார அதிகாரி காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் மட்டும், கடந்த 9 மாதங்களில் 11,027 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .