2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சர் திகாவுக்கு புகழாரம்

எஸ்.சதிஸ்   / 2019 மார்ச் 25 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும், இந்த நாட்டில் எத்தகைய உயர் பதவிகளுக்கும் செல்லலாம் என்பதை, அமைச்சர் திகாம்பரம் நிருபித்துக் காட்டியுள்ளார் என்று, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க புகழாரம் சூட்டினார்.  

இந்திய அரசாங்கத்தால், கொத்மலை, எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (24) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தோட்டப் பகுதிகளில் தொழில்செய்வதை விட, அரச உத்தியோகத்தர்களாக இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதென்று  தெரிவித்தார்.  

மேலும் அவர், தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ந்தும் லயன் குடியிருப்புகளில் வசித்தது போதும் எனக் கருதி, அவர்களுக்கும் மாற்று வீடமைப்புத் திட்டத்தை, ஐக்கிய தேசிய முன்னணியே கொண்டுவந்தது என்பதில், எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று தெரிவித்தார்.  

பெருந்தோட்ட மக்கள், ஏழு பேச்சர்ஸ் காணியுடனும் இன்னும் பல அடிப்படை வசதிகளுடனும் வாழ்வதற்கு, நிரந்தரமான வீடமைப்புத் திட்டத்தை, தாம் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் கூறினார். 

அமைச்சர் திகாம்பரம், மலையக மக்களுக்காக நேரம் காலம் பாராது, அர்ப்பணிப்புடன் சேவைகளை முன்னெடுத்து வருவதை, காணக்கூடியதாக உள்ளதென்றும், வீடமைப்புத் திட்டம், சிறந்தமுறையில் முன்னெடுக்கப்படுவதற்கு, நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றார் என்றும் தெரிவித்தார். 

 அதேபோன்று, இந்திய அரசாங்கமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்கள், எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.  

“இந்தியா எமது நெருங்கிய நட்பு நாடாகும். சகல சந்தர்ப்பங்களிலும் இந்திய அரசு, எம்முடன் இணைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தியா, இன்று இந்த வீட்டுத்திட்டத்தை எமக்கு அளித்திருக்கின்றது. அதற்காக நாம், பெருமிதத்துடன் நன்றி கூறிக்கொள்கின்றோம்” என்றார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம், மலையகத்திலுள்ள திறமைவாய்ந்த தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, உயர்வான பதவிகளை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகின்ற ஓர் அரசாங்கமாகும் என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .