2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அர்த்தமற்ற போராட்டங்களுக்கு ‘தொழிலாளர்கள் தூண்டப்படுகின்றனர்’

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பள உயர்வு விடயத்தில், தொழிலாளர்களை அர்த்தமற்றப் போராட்டங்களுக்கு சிலர் தூண்டிவிடுகின்றனரென, நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி குற்றஞ்சாட்டியுள்ளார்.   

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கை நியாயமானதென்றும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு, முதலாளிமார் சம்மேளனத்துக்குறியது என்றும் கூறினார்.   

முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள தொகையானது, நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு, எவ்வகையிலும் போதுமானதல்ல என்று விமர்சித்த அவர், நியாயாமன சம்பளத்தைப் பெற்றுக்
கொடுப்பதற்காகவே, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன என்றும் தெரிவித்தார்.  

ஆனால் ஒருசிலர், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்களில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை மட்டும் இலக்கு வைத்துப் பேசுவதாகவும் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அர்த்தமற்ற போராட்டங்களை மலையகப் பகுதிகளில் முன்னெடுப்பதாகவும் சாடினார்.   

நெருக்கடியான அரசியல் சூழ்நிலையிலும் கூட, நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை மஹிந்த ராஜபக்‌ஷ ஆற்றிய சிறப்புரையில், தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கையை நியாயப்படுத்தி உரையாற்றினாரென்றும் மலையக மக்களின் நலனுக்காக, அவர் ஆற்றிய உரையை, மலையக அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தி  உள்ளார்கள் என்றும் சாடினார்.இவ்வாறானவர்களே, தங்களது ஆதரவாளர்களூடாக, தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அர்த்தமற்றப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என, நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சிவரஞ்சனி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .