2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரியில் வரட்சி; தேயிலைச் செடிகள் கருகின

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி மாவட்டத்தில், கடந்த 3 வாரங்களாக நீடித்து வரும் வரட்சி காரணமாக, ஹெக்டேயர் கணக்கிலான தேயிலைச் செடிகள் கருகிவிட்டன என்றும், இதனால் தேயிலை உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், மாவட்டத்துக்கு உட்பட்ட கம்பனிகளும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இம்மாவட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 6 நாள்கள் என்றடிப்படையில் மாதம் 24 நாள்களும் வேலை வழங்கப்பட்டதெனவும், எனினும், தற்போது வாரத்தில் 3 நாள்களுக்குக் குறைவான நாள்களே, வேலைகள் தமக்கு வழங்கப்படுவதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் தாம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும், தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் நீடித்துவரும் வரட்சி காரணமாக, 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 900,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .