2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கள் இறக்குவதிலுள்ள சிக்கல் நீக்கப்படும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலித ஆரியவன்ஸ

ஊவா மாகாணத்தில், கள் இறக்குவதிலுள்ள சட்டத் சிக்கல்களை நீக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, இந்த விடயம் தொடர்பில், பொலிஸாருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பதுளை- தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில், நேற்று (19) நடைபெற்ற, மாகாண அபிவிருத்தி ​தொடர்பான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தான் மத்திய மாகாணத்தின் ஆளுநராகக் கடமையாற்றிய போது, மத்திய மாகாணத்தில் காணப்பட்ட கள் இறக்குவது தொடர்பான சட்டச்சிக்கலை நீக்கியதைப் போல, ஊவாவிலும் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஊவாவில் கித்துல் தொழிற்றுறையை மேம்படுத்துவது மட்டுமின்றி, விவசாயம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேம்படுத்தவுள்ளதாகவும் இதற்காக, கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிதியைப் பயன்படுத்துவதன் மூலம் இதனை மேம்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.

கிராமம் புறங்களிலுள்ள மக்கள் தனியார் நிறுவனங்களிடம் கடன்களைப் பெற்று,  அவற்றை மீளச் செலுத்த முடியாமல் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், கூட்டுறவு சங்கம் ஊடாக, சிறியளவு வட்டியின் கீழ் இந்த மக்களுக்கு விவசாயம், சுயதொழில்களுக்காக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இம்மக்களை பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .