2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காணி உரித்து வழங்கப்படும்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில் வாழும் 3,760 குடும்பங்களுக்கு காணி உரித்தை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில், மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

பெருந்தோட்டத்துறையில் வாழும் 3,760 குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணி உரித்தை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் பத்திரமொன்றை அமைச்சர் திகாம்பரம் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், குறித்த பத்திரத்தை அமைச்சரவை இன்று (17) அங்கிகரித்து 3,760 பயனாளிகளுக்குக் காணி உரித்தை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.  

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“காணி உரிமையற்று வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரித்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாண்டு மலைநாட்டு, புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால், இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளான குடும்பங்களும் உள்ளடங்கலாக பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2,551 புதிய வீடுகளுக்கும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 1,134 வீடுகளுக்கும், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள 75 வீடுகளுக்கும் மொத்தமாக 3,760 குடும்பங்களுக்குமான காணி உரித்தை வழங்குவதற்கே அனுமதி கிடைத்துள்ளது.   

“ஏற்கெனவே, ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதியன்று அமைச்சரவையில் 2,864 குடும்பங்களுக்கு காணி உரித்து வழங்குவதற்கு அனுமதி அளித்திருக்கின்ற நிலையில் மொத்தமாக 6,624 பயனாளிகளுக்கு 7 பேர்ச் காணிக்கான தூய உரித்துகள் வெகு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .