2024 மே 08, புதன்கிழமை

கினிகத்தேனை அலுவலகத்துக்கு ரூ.50 இலட்சம் நட்டம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நீடித்து வரும் சீரற்ற வானிலை காரணமாக, மின் வடலிகள், மின்சாரத் தூண்களின் மீது, மரங்கள் முறிந்து விழுந்தமையால், மின்சார சபையின் கினிகத்தேனை அலுவலகத்துக்கு, 50 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென, மேற்படி அலுவலகத்தின் மின் பொறியியலாளர் புஸ்பிக திசாநாயக்க தெரிவித்துள்ளர்.

2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், மேற்படி மின்சார சபையின் கிளை அடைந்த அதிகூடிய நட்டமாக, இந்தத் தொகை பதிவாகியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

மலையகத்தில், கடந்த வியாழக்கிழமை (16) பல பகுதிகளை ஊடறுத்துச் சென்ற மினிசூறாவளி, பாரிய மரங்களை முறித்தும், இரும்புகளிலான மின்கம்பங்களைச் சரித்தும், தாண்டவமாடிக் கடந்துசென்றது.

இதனால், ஹட்டன் முதல் பொகவந்தலாவை வரையிலான பகுதிகளுக்கு, மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

மேலும் கினிகத்தேன பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின் இணைப்புத் தடைப்பட்டுள்ள நிலையில், 150 வீடுகளுக்கு மாத்திரமே இணைப்பு மீள வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தடைப்பட்ட பிரதேசங்களுக்கான மின் இணைப்புகளை மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X