2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’கேபிள் கார், ரயில் சேவை​யை நீடிக்க திட்டம்’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடையை ஊடறுத்து, கேபிள் கார், ரயில் சேவையை நீடிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளாக, முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான அகில எல்லாவள தெரிவித்தார்.

பலாங்கொடையிலுள்ள அவரது காரியாலத்தில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உல்லாசப் பயணிகளைக் கவரும் பிரதேசமாக, இரத்தினபுரி பிரதேசத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

உலகமுடிவிலிருந்து பலாங்கொடை ஹல்பே பிரதேசம் வரையில் கேபிள் கார் திட்டத்தை அமைப்பதற்காக மதிப்பீட்டை, பொறியியலாளர்கள் வழங்கியுள்ளனர் என்றும் இதற்கு, 115 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தற்போது அவிசாவளை வரை இடம்பெறும் ரயில் சேவையை குருவிட்ட, இரத்தினபுரி, ​பெல்மதுளை, பலாங்கொடை ஊடாக, ஹப்புத்தளை வரை நீடிக்கவும் அரசாங்கத்தின் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .