2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சங்கம் மாறினார் கறுப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் விசுவாசி எனக் கருதப்பட்டு வந்த நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் 'கறுப்பு' என்றழைக்கப்படும் இராமையா மலர்வாசகம், தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் முன்னிலையில் அவர் உத்தியோகப்பூர்வமாக இணைந்துகொண்டார்.

(கறுப்பு) என்று அனைவராலும் அழைக்கப்படும் மலர்வாசகம், 1989ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்ததுடன் 29 ஆண்டுகளாக அரசியல் பயணத்தை தொடரும் அவர், நான்கு தடவைகள் நுவரெலியா பிரதேசசபையின் உறுப்பினராக இருந்து, தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பத்தனை பிரதேச அமைப்பாளராக இயங்கிவந்த நிலையிலே, தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நேற்று (10) இணைந்துகொண்டார்.

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மைதானத்துக்கு அருகிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட சட்டவிரோதக் கட்டடங்களில் கருப்புவின் கட்டடமும் ஒன்றென்றும் பிரதேச சபையின் அனுமதியுடனும் கருப்பின் இணக்கத்துடனும் அந்தக் கட்டடம் அகற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மேலும் இரண்டு வருடங்களில் கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகிப்பதற்கான வாய்ப்பை கறுப்புக்குத் தருவதாக ஆறுமுகன் தொண்டமான் எம்.பி உறுதியளித்திருந்தப் போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்பதால் ஏற்பட்ட அதிருப்தி போன்ற காரணங்களாலேயே கறுப்பு, இ.தொ.காவிலிருந்து விலகியதாக தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .