2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் வகுப்புகளுக்குக் கட்டுப்பாடு’

சிவாணி ஸ்ரீ   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் அனைத்து தனியார் வகுப்புகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.  

ரம்புக்கன சுஜாதா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  

சப்ரகமுவ மாகாணத்தில் தனியார் வகுப்புகளின் தரம், அதில் கல்வி பயிலும் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தே, மேற்படி தனியார் வகுப்புகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.  

மேற்படி மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில், அரசாங்க பாடசாலைகளுக்கு அருகிலுள்ள தனியார் வகுப்பு சம்பந்தமான விளம்பரங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதகாவும் ​அவர் தெரிவித்தார்.  

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து தனியார் வகுப்புகளும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தனியார் வகுப்புகளில் காணப்படும் மலசலக்கூடம், குடிநீர் என்பன சிறந்த முறையில் பாதுகாப்பாக இடங்களில் உள்ளதா என்பது குறித்து, வனத்தில் எடுத்துக்கொள்ளப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

மேற்படி மாகாணத்தில் தனியார் வகுப்பு உள்ள இடங்களில், மதுபானம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் அற்ற இடமாக மாற்றியமைப்பதற்கு, சப்ரகமுவ மாகாண சபை, மாவட்ட செயலகம், பொலில் நிலையம், மதுவரி திணைக்களம், பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைத்து குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.  

அத்தோடு, சப்ரகமுவ மாகாண சபையின் மூலம், ஞாயிற்றுகிழமை, போயா ஆகிய தினங்களில், தனியார் வகுப்புகளை தடை செய்வதற்கான சட்டமும் கொண்டு வரப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .