2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பள உயர்வுக்காக சவப்பெட்டிப் போராட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொகவந்தலாவ டின்சின், பொகவந்தாவ கெம்பியன் நகர் ஆகிய பகுதிகளில், சவப்பெட்டிப் போராட்டம் இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவ கெம்பியன் நகரில் இடம்பெற்ற சவப்பெட்டிப் போராட்டத்தில், 12 தோட்டங்களைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றதோடு, பொகவந்தலாவ டின்சின் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில், நான்கு தோட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள், சவப்பெட்டி ஏந்தியும் கொடும்பாவி எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, நியாயமான சம்பள உயர்வை வழங்குவதற்கு, தோட்டக் கம்பனிகள் மறுப்புத் தெரிவிப்பதாகச் சாடிய அவர்கள், இவ்விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாகச் செயற்பாடுவதாகவும் அங்கலாய்த்தனர்.

ஏனைய துறையினருக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட, தமக்கு வழங்கப்படுவதில்லை என்றும், மலையகத் தொழிலாளர்களுக்கு வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூட ஆதரவு தெரிவித்து வருகின்றனர் எனவும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தொழிலாளர்களுக்கான ஆதரவு, நாளுக்குநாள் பெருகிவரும் நிலையிலும்கூட, தோட்டக் கம்பனிகள் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்குப் பின்வாங்குவது ஏன் எனவும், அவர்கள் இதன்போது கேள்வியெழுப்பினர்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்க, ஜனாதிபதியும் பிரதமரும் இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என, இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .