2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுபான்மைக் கட்சிகள் “பேரம் பேசும் சக்திகளாக மாற வேண்டும்”

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 

நாட்டில் தற்போது  நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில், நாட்டை ஆளக்கூடிய பெரும்பான்மைக் கட்சிகளுக்கு, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு இன்றி அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ள நுவரெலியா மாநகர சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜன், எனவே, சிறுபான்மைக் கட்சிகள் பேரம் பேசும் சக்திகளாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறுபான்மைக் கட்சிகள்,  பலம் பொருந்திய  அமைப்பாக மாறவேண்டும் என்ற நிலைப்பாட்டில்,  புதிய கூட்டணி ஒன்று, அண்மையில் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மைக் கட்சிகள்,  ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை  முழுமையாகப் பூர்த்திசெய்வதில்லை என்றும்  இது வரலாறு கண்ட  உண்மையாகும் என்றும் தெரிவித்ததுடன்,  எனவே, சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள  சிறுபான்மைக்  கட்சிகள், பேரம் பேசும் சக்தியாக மாறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்காக மாற்றம் ஒன்றைக் கொண்டுவர நாட்டில் வடக்கு ,கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடின்றி முழு நாட்டிலும் இயங்கிவரும் தமிழ்க் கட்சிகள் கருத்து வேறுபாடுகள் இன்றி தமிழர்களின் உரிமைக்காகத் தேசிய அணியாகக் கூட்டுச் சேரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .