2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது’

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

கம்பனிகளின் சூழ்ச்சிக்கு அடிபணியாது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ​ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என, அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் டொக்டர் கே.ஆர். கிஷான் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் - டிக்கோயாவில் சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றும் எனினும் இதை தடுத்து நிறுத்துவதற்கு, கம்பனிகள் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தாவது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படல் வேண்டும் என்று அவர் கூறினார்.

கம்பனிகளின் நிர்வாக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், மேலதிக சலுகை, வாகன வசதிகள் அனைத்துக்குமாறு, கம்பனிகள் பல மில்லியன் கணக்கில் செலவிட்டு வருவதாகவும் இவ்வாறு செலவு செய்தால், கம்பனி நட்டத்தில்தான் இயங்கும் என்றும் அவர் கூறினார்.

கம்பனிகள், 50 சதவீத நிர்வாக செலவுகளைக் கழித்த பின்னரே, இலாபத்தைப் பார்க்கின்றது என்றும் எனவே, கம்பனிகள் நட்டத்திலேயே இயங்குகின்றன என்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .