2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டயகம 5ஆம் பிரிவில் அவலம்

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட டயகம 5ஆம் பிரிவு தோட்டத்தில் வாழும் 50 குடும்பங்களின் வீடுகளில், வௌ்ளநீர் குடிபுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில், 50 குடும்பங்களைச் சேர்ந்த 575க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

இக்குடியிருப்பை அண்மித்த பகுதியில், மகாவலி கங்கைக்கு நீர் ஏந்தும் ஆக்ரோயா ஆறு காணப்படுவதாகவும் மழைக்காலங்களில், ஆற்று நீர் பெருக்கெடுப்பதால், பல்வேறு சிரமங்களுக்கு, பிரதேச மக்கள் முகங்கொடுத்து வருவதாகவும் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த பகுதிக்கான பாதை, மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதாகவும் சாரதிகள், மிகுந்த அச்சத்துடனேயோ, வாகனங்களைச் செலுத்திச் செல்வதாகவும் மக்கள் கூறுகின்றனர். மழைக்காலங்களில், வீதியை, பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள சில வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், இது தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எ​னவே, குறித்த பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .