2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டயகம மேற்கில் ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ கிராமம் கையளிப்பு

செ.தி.பெருமாள்   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில், டயகம மேற்கு தோட்டத்தில் “ஆபிரஹாம் சிங்ஹோ” எனும் பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 வீடுகள் அடங்கிய புதிய கிராமம், எதிர்வரும் 20ஆம் திகதி, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளது.  

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொள்ள உள்ளனர்.  

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல், நோர்வூட் விளையாட்டு மைதானத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, பொதுச் செயலாளர் பிலிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .