2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டிக்கோயா வைத்தியசாலையில் 15 பேருக்கு சுயதனிமை

Gavitha   / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இரண்டு வைத்தியர்கள், 6 தாதியர்கள், 7 உதவியாளர்கள் என, மொத்தம் 15 பேர், இன்று (12) முதல், தொடர்ந்து 14 நாள்களுக்கு, வைத்தியசாலையிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, நோர்வூட் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையின் 7, 8 இலக்கங்களைக் கொண்ட விடுதியில், பெண் நோயாளர் ஒருவருக்க கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த விடுதியில் இருந்த 30 நோயாளர்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் எனினும் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவை, வழமைபோல் இயங்கும் என்றம் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலைக்கு, உடல் பரிசோதனை மேற்கொள்ள வந்த நபர் ஒருவர், கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அங்கு அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, தற்போது 15 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .