2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டிலரி விவகாரம்; தற்காலகத் தீர்வு

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், ரஞ்சித் ராஜபக்ஷ

டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்டத்திலிருந்து, பிலிங்பொனி தோட்டத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலைக்கு, குடிநீரைக் கொண்டு செல்லும் திட்டத்தால் அதிருப்தியடைந்த சாஞ்சிமலை தோட்ட மக்கள், தோட்ட முகாமையாளரின் விடுதியைச் சுற்றிவளைத்ததுடன், சாஞ்சிமலை- ஹட்டன் வீதியை மறித்து, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு, நேற்று (22) பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, இத்திட்டத்தை தற்காலிகமாகக் கைவிடுவதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

டிக்கோயா- சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்ட மக்கள் பயன்படுத்தும்

குடிநீரை, மேற்படி தனியார் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்தமையால், தோட்ட மக்கள், கடந்த இரண்டு வாரங்களாக நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், கால்வாய் வெட்டும் பணிகளையும் இடைநிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தோட்ட நிர்வாகமானது, அயல் தோட்டத் தொழிலாளர்களை அழைத்துவந்து, கால்வாய் வெட்டும் பணிகளை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சாஞ்சிமலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரின் விடுதியை நேற்று (28) சுற்றிவளைத்ததுடன், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர். 

ஆர்ப்பாட்டத்தில், டிக்கோயா, சாஞ்சிமலை கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு, பொயிஸ்ட்ன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தலைமையிலான உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நோர்வூட் பிரதேச சபையின் கட்டளையையும் மீறி, தோட்ட நிர்வாகம் செயற்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

முகாமையாளரின் விடுதி சுற்றி வளைக்கப்பட்டமை, ஆர்ப்பாட்டம் காரணமாக, சாஞ்சிமலை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கைளை முன்வைத்தனர். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல், மேற்படி திட்டத்துக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்றும் தொழிற்சாலைக்குக் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், தோட்ட மக்கள் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நிறுத்துமாறு மனுவொன்றையும் தோட்ட முகாமையாளரிடம் இதன்போது அவர் கையளித்தார்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை தற்காலிமாக இடைநிறுத்துவதற்கு, தோட்ட நிர்வாகம் இணங்கியதுடன், இவ்விடயத்தை மேலதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தோட்ட மக்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .