2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இரண்டாக பிளந்தது வருத்தமே’

Editorial   / 2020 ஜூன் 14 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளமை வேதனையளிப்பதாக, பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் ஒன்றாகச் செயற்பட்டே, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும், அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக,
இ.தொ.காவுக்கு சேர்ந்துக் குரல் கொடுத்து வருகின்றமை, மறுக்க முடியாத உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.  

மறைந்த சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து, அமரர் ஆறுமுகன் தொண்டமான் வரை, தொழிற்சங்க ரீதியில் தே.தோ.தொ.சங்கம், இ.தொ.காவுடன் சேர்ந்து செயற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  

எனவே, சங்கத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் ஒன்றுக்கூடி இப்பிரச்சினையைச் சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்றும், செந்தில் தொண்டமான் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .