2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தோட்ட அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்ட அதிகாரியின் ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து, மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக, நேற்று   காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி தோட்டத்தில் தொழில்புரிந்து வரும் சுமார் 175க்கும் மேற்பட்டத் தொழிலாளர்களே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்தத் தோட்டத்தில், சகோதர மொழியைச் சேர்ந்த ஒருவரே, தோட்ட முகாமையாளராகக் கடமையாற்றி வருவதாகவும் இவர், சகோதர மொழியில் உரையாற்றுமாறு, தம்மை வலியுறுத்தி வருவதாகவும், தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், கொழுந்து வளர்ச்சி குறைந்த தேயிலை மலைகளில் பணியாற்றும்போது, 18 கிலோகிராம் கொழுந்தை கட்டாயம் பறிக்க வேண்டுமென்றும் அவ்வாறு பறிக்காத பட்சத்தில் அறைநாட் சம்பளத்தையே தமக்கு வழங்குவதாகவும் சில தொழிலாளர்களை வேலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கள பரீட்சைக்காக தோட்ட அதிகாரிவரும் போது, தொழிலாளர்கள் தொப்பி அணியக்கூடாது எனவும் அதனைக் கழற்றுமாறும் வலியுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில் உரிமையை பறிக்கும் விதத்தில் தோட்ட அதிகாரி நடந்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ள தொழிலாளர்கள், எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .