2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

Kogilavani   / 2017 ஜூலை 23 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

பெருந்தோட்ட மக்களின் போசாக்கை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் பெருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பெருந்தோட்டப் பகுதிகளில் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டம் ஊக்குவிக்கப்படவுள்ளதாக, மத்திய மாகாண அமைச்சர் மருதபான்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் நன்னீர் மீன்வளர்ப்பில் ஈடுபட்டு வருவோருக்கு, நன்னீர் மீன்வளர்ப்பு தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு, ஹட்டன், கிருஸ்ணபவன் மண்டபத்தில், சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நுவரெலியா மாவட்ட வாழ்மக்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளார். அந்தவகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதனூடாக, வருவாயை அதிகரித்துக்கொள்வதுடன், போசாக்கு மட்டத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற நோக்கில், இந்த நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டதை பெருந்தோட்டப் பகுதிகளில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வகையில் நீரூற்றுகள் காணப்படும் தெரிவுசெய்பட்டுள்ள 100 இடங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. அதன் ஆரம்பக்கட்டமாக மத்திய மாகாண நன்னீர் மீன்வளர்ப்பு அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் வேலைத்திட்டமானது

பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட பன்மூர் கரோலினா, ஸ்டேதண்ட் டன்சினன், லிப்படன் ஆகிய தோட்டப் பகுதிகளில் முதற்கட்டமாக அரம்பித்து வைக்கப்படவுள்ளது” என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .