2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிர்வாக முடக்கம் நிறைவு; இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, ஸ்பிரிங்வெளி பெருந்தோட்டத்தின் ​தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும் என்று, உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

பதுளை உதவித் தொழில் ஆணையாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் (04) உதவித் தொழில் ஆணையாளர் முன்னிலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, மேற்படி இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.   

ஸ்பிரிங்வெளி பெருந்தோட்டத்திலுள்ள 7 பிரிவுகளினது தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், இரண்டு வாரங்களுக்குள் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் இவ்விரு வாரங்களுக்குள்ளும் அதைத் தொடர்ந்துவரும் காலப்பகுதிகளிலும், பிரச்சினைக்குரிய ஸ்பிரிங்வெளி தோட்ட முகாமையாளரை, தோட்டத்திலிருந்தே நீக்குவதற்கு, பேச்சுவார்த்தையின் போது, இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.   

அத்தோடு, தோட்ட முகாமையாளர் நீக்கப்படும் வரை, அவர் தொழில் மேற்பார்வைக் கடமைகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிர்வாக முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 1,200 பேரும், போராட்டத்தை, கைவிட்ட. நேற்று தொழிலுக்குச் செல்வதற்குத் தீர்மானித்தனர்.   
பதுளையின், ஸ்பிரிங்வெளி பெருந்தோட்டங்களின், 7 பிரிவுகளைச் சேர்ந்த 1,100 தொழிலாளர்கள், தங்களது அடிப்படைப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, நேற்று முன்தினம் (03), நிர்வாக முடக்கம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.   

தங்களது அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிவித்து, ​தோட்டத் தொழிற்சாலையை மூடி, தோட்ட முகாமைத்துவத்தினருக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தைத்த துண்டித்தும் நீர் விநியோகத்தைத் துண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .