2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பாதீட்டில் மலையகத்துக்கு பல திட்டங்கள் வரும்’

எஸ்.சதிஸ்   / 2019 மார்ச் 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம், மலையக மக்களுக்கு மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை, மலைநாட்டுப் புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதென, நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் பழனிவேல் கல்யாணகுமார் தெரிவித்தார். 

பொகவந்தலாவ- சிங்காரவத்தை தோட்டத்துக்கான வீதி, 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த நிதியொதுக்கீடு தவிர, பெற்றோசோ, பிரீட்லென்ட் தோட்டம், எல்டொப்ஸ் போன்ற தோட்டங்களுக்கான உள்வீதிகளுக்கு, தலா 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றும் சிங்காரவத்தைத் தோட்டத்துக்கு, எதிர்வரும் மாதங்களில் தனிவீட்டுத் திட்டமும் கொண்டுவரப்படவுள்ளது என்றும் அவர் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .