2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பாதுகாப்புக்கு ஊழியர்கள் தேவை’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியமைச்சரிடம்  இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்துக்கு  இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் தமது கடிதத்தில்,

கடந்த ஏப்பிரல் மாதம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து மாணவர்களதும், சமூகத்தினதும் பாதுகாப்புக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் அதன் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும், பெரும்பாலான பாடசாலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் உள்ளன. எனவே, அத்தகைய பாடசலைகளுக்கும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கும் மாணவர்கள் சுமுகமான சூழ்நிலையில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு வழங்கும் வகையில் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .