2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரசாரக் கூட்டத்துக்கு இடையூறு: தோட்டத் தலைவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்புக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர் ஒருவரை, பொகவந்தலாவை பொலிஸார்,  இன்று (23) கைதுசெய்தனர்.

பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தின் தலைவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இ.தொ.காவின் மக்கள் சந்திப்பு, இன்றுக் காலை 10.30 மணிக்கு, தெரேசிய தோட்டத்தில் இடம்பெற்றது.

இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், பிரதேச மக்களை, தேயிலை மலைகளுக்குச் சென்று சந்தித்தார்.

இதன்போது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர் ஒருவர், பிரசாரக் கூட்டத்துக்கு இடையூறு விளைவித்துள்ளதுடன் ஆறுமுகன் தொண்டமான் எம்.பியையும் தகாத வார்த்தைகளால் திட்டினாரென, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரைக் கைதுசெய்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாகாணசபை உறுப்பினர் முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் மாகாண சபை உறுப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால், மாகாணசபை உறுப்பினர் முறைப்பாடு செய்துவிட்டுத் திரும்பும்வரை, பொலிஸ் நிலைய வளாகத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

இந்த மக்கள் சந்திப்பில், இ.தொ.காவின் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரனியுமான பி.ராஜதுறை ஆகியோரும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், தெரோசியா தோட்டத்தில் நடைபெற்ற குளறுபடி காரணமாக, ஏனைய தோட்டங்களில் நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டங்களை இரத்துச் செய்துவிட்டு, ஆறுமுகன் தொணடமான் எம்.பி மீண்டும் திரும்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .