2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் சிறந்த சேவைக்கு அபிவிருத்தியே வேண்டும்’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ் 

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை, உடனடியாக அபிவிருத்திச் செய்தால், தோட்டத் தொழிலாளர்கள், தரமான சுகாதாரச் சேவைப் பெற்றுக்கொள்ள முடியும் என, வைத்திய நிபுணரும் அருநலு ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளருமான கிரிஷாந்த் தெரிவித்துள்ளார். 

ஹட்டனிலுள்ள அவருடைய அலுவலகத்தில், இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

அண்மையில், பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தில், குளவிக்கொட்டுக்கு உள்ளாகி, சிகிச்சைப் பலனின்றி பெண்ணொருவர் உயிரிழந்தமைக்கு, தோட்ட வைத்தியசாலையில் நிலவிய மருந்துத் தட்டுப்பாடே காரணம் என்று கூறிய அவர், இவ்வாறு குளவிக்கொட்டியும் சிறுத்தைத் தாக்கியும் தொழிலாளர்கள் பலியான சம்பவங்கள், மலையகத்திலேயே அதிகம் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.  

வெளிநாடுகளிலிருந்து, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்துக்குக் கிடைக்கும் மில்லியன் கணக்கான பணத்தை வைத்துக்கொண்டு, எத்தனையோ தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்திச் செய்யலாம் என்று கூறிய அவர், இதனால் ஒன்றுமே நடைபெறுவதில்லை என்றும் இதனால், தோட்ட வைத்தியசாலைகளும் சரியான முறையில் இயங்குவதில்லை என்றும் அவர் கூறினார்.  

தோட்டக் வைத்தியத்துறைகள் குறித்து, தோட்ட கம்பனிகளை விட, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய​மே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தோட்ட வைத்தியசாலைகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நேரடிக் கண்காணிப்பிலே உள்ளது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .