2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மத்திய மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 8033 ஆக உயர்வு

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்  

மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,033 ஆக உயர்வடைந்துள்ளதாக,  மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில்​ இதுவரை 5,147 தொற்றாளர்களும்  நுவரெலியா மாவட்டத்தில் 1,609 தொற்றாளர்களும் மாத்தளை  மாவட்டத்தில் 1,277 தொற்றாளர்களுமாக மொத்தமாக 8,033  தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில்  அதிக தொற்றாளர்கள் கண்டி மாநகர சபை எல்லைக்குள் பதிவாகி உள்ளனர் என்றும் அத்தொகை 567 என்றும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில்​ அம்பகமுவ சுகாதார பிரிவிலேயே  அதிக தொற்றாளர்கள்  பதிவாகியுள்ளதுடன் அத்தொகை 201 என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாத்தளை  மாவட்டத்தில் உக்குவளை சுகாதார அதிகாரி பிரிவிலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அத்தொகை 264 என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய மாகாணத்தில்  கொரோனா தொற்றினால் 84 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன்  கண்டி மாவட்டத்தில் 61 மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் 12 மரணங்களும் நுவரெலிய மாவட்டத்தில் 12 மரணங்களும்  பதிவாகியுள்ளன என்று  சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .