2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மலையகத் தலைமைகள் ஒன்றிணையவேண்டும்’

Gavitha   / 2021 ஜனவரி 18 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

நாட்டின் வட, கிழக்குத் தமிழ்த் தலைமைகள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விடயத்தில் ஒன்றுபட்டு செயற்பட்டமை, நடைபெறவுள்ள ஜெனீவா மகாநாட்டில் ஒன்றுபட்டு செயற்பட முடிவெடுத்துள்ளமை ஆகிய விடயங்கள் வரவேற்கத்தக்கவை என்று தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனியின் நிதிச் செயலாளர் இரா.சலோபராஜா அதேபோன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் நாள் சம்பள உயர்வுக்கும் மலையகத்தின் சமூகம் சார் அரசியல், தொழிற்சங்கத்தலைமைகள் ஒன்றுபட்டு செயல்படல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனியின் அரசியல் பிரிவு செயலகத்தை, பதுளையில் வைபவ ரீதியாக நேற்று (17) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்குத் தலைமைகள்  அண்மைக்காலமாக ஒற்றுமையின்றி செயல்பட்டாலும், நினைவுத்தூபி  விடயத்தில் ஒற்றிணைந்து செயற்பட்டனர் என்றும் ஜெனீவா மாநாட்டிலும் ஒன்றுபட்டு செயற்பட முடிவெடுத்துள்ளமை ஆரோக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மலையக அரசியல் தலைமைகளும் செயற்படவேண்டும் என்றும் கட்சிகள் வேறாயினும், சமூக சார் விடயங்களில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .