2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையகத்துக்கான 16 ரயில் சேவைகள் முடக்கம்

Editorial   / 2017 டிசெம்பர் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

புகையிரத சேவையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக, நேற்றைய தினத்தில் மாத்திரம், மலையத்துக்கான 16 புகையிரத சேவைகள் முடங்கப்பட்டுள்ளதாக, புகையிர நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவத்தார்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக, இன்றைய (08) தினம், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பலரும், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

பலர் புகையிரத நிலையத்துக்கு வருகை தந்து புகையிரதம் இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் மீண்டும் பஸ் நிலையங்களை நோக்கிச்சென்றனர்.

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, தபால் சேவைகள் ஓரளவு தாமதமாகின. 6ஆம் திகதியன்று இரவு, வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இருந்த தபால் பொதிகள் இன்று அதிகாலை, வேன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தபால் திணைக்களத்துக்கு அதிக பணம் செலவிட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

இன்று பாடசாலை மாணவர்களுக்கு, மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும் நாள் என்பதால், புகையிரத கடவூச்சீட்டுக்களை பெற்றிருந்தவர்கள் அவற்றில் செல்ல முடியாததன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்தவேலை நிறுத்தம் காரணமாக, புகையிரதது் திணைக்களத்தகு்க பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும், பயணிகளின் நலன் கருதி, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் ​சொந்தமான பல பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக, பாரியளவில் பயணிகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 12ஆம் திகதி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டால், பரீட்சை எழுதும் மாணவர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இதனைக் கருத்திற்கொண்டு, புகையிரத சேவையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .