2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மாத்தளை மாவட்டப் பெருந்தோட்ட மக்களுக்கு பிரதிநிதிகள் இல்லை’

பா.திருஞானம்   / 2019 மார்ச் 27 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு, நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் இல்லாதக் குறையைத் தீர்ப்பதாகக் கூறியுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், மாத்தளை மாவட்ட பெருந்தோட்டங்களிலுள்ள மக்கள், தங்களது பிரச்சினைகளை, நேரில் வந்து பேசி தீர்த்துக்கொள்ளுமாறும் கூறினார்.  

மாத்தளை, இறத்வத்தை தோட்டத்தில், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கிளைக் காரியாலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

மாத்தளை மாவட்ட மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுவதைத் தான் அறிந்து வைத்துள்ளதாகக் கூறியதுடன், அவை அனைத்தையும், கட்டம்கட்டமாகத் தீர்த்துவைப்பதாகவும் கூறினார்.  

தற்போது, குறிப்பட்ட சிலருக்குக் காணிகள் வழங்கப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில், அனைவருக்கும் காணி உரிமைகள் வழங்கப்படும் என்றும் தற்போது, எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் 384 குடும்பங்களுக்கு, பசுமை பூமிக் காணி உரித்து வழங்கும் திட்டத்தின் கீழ், காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் எதிர்காலத்தில், இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மூலம், பெருந்தோட்ட மக்களுக்கு பல நன்மைகளைப் பெற்றுக்கெடுக்க, மலையகத்தைச் சேர்ந்த அரசியல் தலைமைகள், ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .