2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாற்றுக் காணியொன்று வேண்டுமெனக் கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

கேகாலை - தெஹியோவிட்ட கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் டெனிஸ்வத்தை தமிழ் வித்தியாலமானது, மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள், இந்தப் பாடசாலைக்கு, மாற்றுக் காணியொன்றைப் பெற்றுத்தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி பாடசாலையானது, கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டது. இதனால், பாடசாலையின் கட்டடங்களும் சேதமடைந்தன.

அத்துடன், பாடசாலையில் கடமைபுரிந்த அதிபரும், மண்சரிவில் புதையுண்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து, சில காலம் மேற்படி பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மண்சரிவு அபாயப் பகுதியிலேயே, தொடர்ந்தும் இந்தப் பாடசாலை இயங்கி வருவதாகத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், மழைக் காலத்தில், மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தாம் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், மழைக் காலத்தில், குறித்த பாடசாலைக்குச் செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்குவதாகவும், மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதாகவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, இந்தப் பாடசாலைக்கு, மாற்றுக் காணியொன்றைப் பெற்றுத் தருவதுடன் அதில், புதிய கட்டடங்களையும் அமைத்துத் தருவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ​வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பாடசாலையில், தரம் 1 முதல் 7 வரையில் வகுப்புகள் காணப்படுவதாகவும் சுமார் 100 பிள்ளைகள் இங்கு கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .