2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘முடக்கத்துக்கு ஒத்தழையுங்கள்’

Gavitha   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உரிமைக்காக, வெள்ளிக்கிழமை (05) முடக்கத்தில், பேதங்களை மறந்து அனைவரும் ஒற்றுமையாக கைகோர்க்குமாறு, நுவரெலியா பிரதேசசபைத் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா பிரதேச தோட்டப்பகுதி மக்கள் உள்ளிட்ட நகர வர்த்தக சங்கங்கள், சாரதிகள் சங்கம் அனைத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத் வலியுறுத்தி, சம்பள நிர்ணய சபையில் நடைபெறவுளள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, நாடளாவிய ரீதியில், அடையாள முடக்கத்துக்கு, இ.தொ.கா அழைப்பு விடுத்துள்ளது.

இன்று (05) நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது,

இந்தப் போராட்டத்துக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுவாக அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்தப் போராட்டத்தின் ஊடாக, தோட்டத்  தொழிலாளர்களின் வெற்றியின் பங்காளிகளாக அனைவரும்  கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதேநேரத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில்  முன்னெடுக்கப்படும் இந்த உரிமைக்கான போராட்டத்தில், மக்கள் பொது  இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்த்து, தங்களின் வீடுகளில் இருந்தவாறு தங்களது ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .